400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்க, புதிய படைப்புகளுடன் களமிறங்குகிறது RC studios. இதன் உரிமையாளரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான R.சந்துரு, தன் பயணத்தில் திரையுலகிற்கு, இன்னும் பல ஆச்சரியமிக்க படைப்புகளை தரவிருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக கன்னடத் துறையில் சூப்பர் பவர் ஹீரோக்களை அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவரது உருவாக்கத்தில் வரவிருக்கும் “ஃபாதர்”, “பி ஓ கே”, “ராம பாணசரிதா”, “டாக்” மற்றும் “கப்ஜா 2” போன்ற படங்கள் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டுகிறது. இப்படங்களை தயாரிக்க R.சந்துருவின் RC studios உடன் பிரபல தொழிளதிபர் ஆனந்த் பண்டிட் கைகோர்த்துள்ளார். மேலும் இப்படங்கள் பல மொழிகளிலும் வெளியாகும் உள்ளது.