Sat. Dec 21st, 2024
Spread the love

இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கடந்த ஜன,12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசானது. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனால், கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தான் எழுதிய ‘பட்டத்து யானை’ நாவல், அதில் திருடி எடுக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் நடிகரும், எழுத்தாளருமான வேலராமமூர்த்தி. ஏற்கனவே இவர் எழுதிய குற்றபரம்பரை, குருதி ஆட்டம், அரியநாச்சி உள்ளிட்ட பல நாவல்களுக்காக புகழ்பெற்றவர் வேலராமமூர்த்தி என்பது குறிப்பிடதக்கது. தற்போது அவர் கூறியதாவது: ‘கேப்டன் மில்லர் படத்தின் கதை எனது ‘பட்டத்து யானை’ நாவலை பின்னணியாக வைத்துத் உருவாகியுள்ளதாக கேள்விப்பட்டேன். இப்படி செய்ய அசிங்கமா இல்லையா? பட்டத்து யானை நாவலை எழுதிய நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம் அல்லது அனுமதி வாங்கி இருக்கலாம்.

கேப்டன் மில்லர் மட்டுமல்ல இன்னும் பல படங்களிலும் எனது கதைகள், சீன்கள் திருடப்பட்டுள்ளன. ராஜமவுலியின் ஆர். ஆர்.ஆர் படத்தில் கூட எனது நாவலில் இருந்து சீன்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வாசகர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். கேப்டன் மில்லர் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். புகார் தந்தாலும், வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள். ஒரு படைப்பாளியின் கதையை கூச்சமே இல்லாமல் திருடுகின்றனர். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது ஒரு படைப்பாளியாக எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *