'விடாமுயற்சி' படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. இப்படம் திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை தினத்தன்று விளக்கேற்றி ராம மந்திரத்தை ஜெபிக்குமாறு, பின்னணி பாடகி சித்ரா வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் பாடகி சித்ராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
”படுக்கை அறை மற்றும் முத்த காட்சிகள் இடம்பெறுவது கதைக்கு அவசியமானதுதான். அதில் நடிக்க முடியாது என்று மறுக்க முடியாது. ஆனாலும் அதுமாதிரியான காட்சிகளில் நடிக்கும்போது சங்கடமாக இருக்கும். உடன் நடிக்கும் நடிகர் என்னைப்பற்றி என்ன நினைப்பாரோ, தவறாக நினைத்து விடுவாரோ என்றெல்லாம் நெருடல் இருக்கும். கூச்சங்களை மறைத்துத்தான் அவற்றில் நடிக்க வேண்டும். காதல் காட்சிகள் என்றாலே நடிகர்-நடிகைகள் ஜாலியாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் மாறவேண்டும்''
இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு, இனியா இணைந்து நடிக்கும்
'தூக்குதுரை'. படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
'அயலான்' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது KJR Studios . வெளியாகியுள்ள 20 நிமிடம் கொண்ட மேக்கிங் வீடியோவில் அயலானை உருவாக்க படக்குழு மேற்கொண்ட சிரமங்களையும் அதற்காக அவர்கள் செய்த உழைப்பையும் பார்க்க முடிகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம்.
குருவாயூர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, அப்படியே சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தில் மலையாள சினிமாவின் மம்முட்டி , மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
குருவாயூர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, அப்படியே சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தில் மலையாள சினிமாவின் மம்முட்டி , மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Previous
Next