லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படம் பிப்.9 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏ..புள்ள’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஹ்மான் இசையில் கபிலன் எழுதிய இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.