எஸ்ஆர் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இதில் ‘முருகா’ அசோக்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கன்னட கவர்ச்சி நடிகை ராகினி திவேதி நடித்துள்ளளார் மற்றும் போஜ்புரி நடிகை ஆர்த்தி இரண்டாவது ஹீரோயினாகவும் ஆதவ் பாலாஜி இரண்டாவது ஹீரோவாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பாக்யராஜ் பேசும்போது, ”படத்தின் பாடல் காட்சியில் பிகினியில் வரும் ராகினி திவேதியுடன் அசோக் குமார் நெருங்கி நடித்துள்ளார். எத்தனை டேக் வாங்கினார் எனத் தெரியவில்லை (சிரிக்கிறார்), சிறு படங்கள் ரிலீசாவது கஷ்டமாகவே உள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 5 திரைகள் இருந்தால் அதில் ஒரு திரையாவது சிறு படத்துக்கு ஒதுக்க வேண்டும்” என்றார். இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன் பேசும்போது, ”மொபைல் கேம் மூலம் நடக்கும் மோசடியை சொல்லும் ஆக்ஷன் திரில்லர் படம் இது. இந்த படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி, போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அமீர் ஆகியோருக்கு நன்றி” என்றார். தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர்கள் அருள்தாஸ், மனோகர், நடிகைகள் வனிதா, கோமல் சர்மா, சொற்பொழிவாளர் முகிலன் உள்பட பலர் பங்கேற்றனர்.