Sat. Oct 18th, 2025
பாம்-திரை ஓசை- thiraiosai.comபாம்-திரை ஓசை- thiraiosai.com
Spread the love

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”.வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது… எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது – இந்தப்படம் அனைத்து தரப்பினருக்குமானது என்பது தான்.ஒரு குறிப்பிட்ட தரப்பே பார்க்க வேண்டிய படம் அல்ல; அனைவரும் ரசிக்கும் படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அன்பே சிவம். அன்புதான் நம்மை எல்லோரையும் ஒன்றிணைக்கும். அதை இந்தப்படம் செய்கிறது. நன்றி.

GEMBRIO PICTURES சார்பில் சம்விதா பாலகிருஷ்ணன் பேசியதாவது… அன்பைத் தாண்டி இந்தப்படத்தில் எல்லோரையும் இணைக்கும் வேறு ஒரு விஷயமும் உள்ளது. டிரெய்லர் பார்த்தால் உங்களுக்குப் புரியும். படத்துக்கு அப்பாற்பட்ட வகையில் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. இமான் சார் இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளன. நாங்கள் படம் பார்த்த போது பெற்ற சந்தோஷத்தை, நீங்கள் அனைவரும் உணர்வீர்கள். இந்தப் படத்தை வெளியிடும் சக்திவேலன் சாருக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பேசியதாவது… தயாரிப்பாளர் சுதா மேடமுக்கு நன்றி. விஷாலும் நானும் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றாக படித்தோம். அங்கிருந்து தொடங்கிய பயணம் இன்று இணைந்து படம் செய்வதற்கு வழிவகுத்தது. இமான் சார் சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.

நடிகர் சரவணன் பேசியதாவது… இயக்குநர் விஷால் வெங்கட்டை, நான் வாய்ப்பு தேடி அலையும் போது, “நரை எழுதும் சுயசரிதம்” பட ப்ரிவ்யூவில் சந்தித்தேன். அவர் இயக்கிய “சில நேரங்களில் சில மனிதர்கள்” மிகச்சிறந்த படம். மிக நல்ல கலைஞர். அவரிடம் ஆசைப்பட்டுக் கேட்டு, கெஞ்சியும் வாங்கி நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

நடிகர் டி. எஸ். கே பேசியதாவது… போன வருடம் லப்பர் பந்து, இந்த வருடம் பாம். அந்தப் படத்தில் நடித்த பல நண்பர்கள் இதிலும் நடித்துள்ளனர். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இதற்கு முன் காமெடி தான் செய்து கொண்டிருந்தேன்; ஆனால் என்னை நம்பி விஷால் வெங்கட் ஒரு நல்ல வேடம் தந்தார்.அவரின் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பார்த்து அவரிடம் வாய்ப்பு கேட்டேன். இரண்டு வருடம் கழித்து அவரே கால் செய்து இந்த வாய்ப்பை தந்தார் – அவருக்கு நன்றி.இமான் சார் ரசிகன் நான்; அவருடைய பாடல்களை மிமிக்ரி செய்து வந்தவன். அவருடைய படத்தில் நடித்தது பெருமை. ஏ, பி, சி ஆடியன்ஸை கவரும் இசையமைப்பாளர் இமான் சார் – அவருக்கு நன்றி.மாஸ் ஆக்ஷனாக நடித்த அர்ஜூன் தாஸை, முழுக்க முழுக்க சாஃப்டாக காட்டும் படமாக இது இருக்கும். ஷ்வாத்மிகா ஹீரோயின் மாதிரி நடக்கவே மாட்டார்; மிக இயல்பாகப் பழகுவார். ஒரு ஹேப்பியான உணர்வைத் தரும் சிறப்பான படமாக இது இருக்கும். அனைவருக்கும் நன்றி.

Trend Music ஜித்தேஷ் பேசியதாவது… இப்படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. சுதா மேடம் இந்த படத்தை நம்பி தயாரித்ததற்கு வாழ்த்துக்கள். படம் பார்த்தோம் மிகச் சிறப்பாக இருந்தது. அர்ஜூன் தாஸை வேறு கலரில் காட்டியுள்ளார்கள். இந்தப்படத்தின் இசையில் நாங்கள் பங்கு கொண்டது மகிழ்ச்சி. மணிகண்டன், காளி வெங்கட் எனப் பல திறமையாளர்கள் இப்படத்தில் பங்கேற்றுள்ளார்கள். இமான் அற்புதமான இசையை தந்துள்ளார். செப்டம்பர் 12 எல்லோரும் திரையில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

எழுத்தாளர்கள் மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன் பகிர்ந்துகொண்டதாவது… விஷாலுடன் நாங்கள் ஒரு டீக்கடையில் பேசி, பேசி உருவானது தான் இந்தப்படத்தின் கதை. அவர் எல்லோரையும் போல எங்களிடமும் வேலை வாங்கினார். இந்தப்படத்தில் பெரிய கருத்தெல்லாம் பேசாமல், உங்களைச் சிந்திக்க வைக்க சிரிக்க வைக்க முயற்சித்துள்ளோம்.

அன்பென்றால் என்ன என்பதை இப்படம் பேசியுள்ளது. ரைட்டிங்கில் இல்லாத பெரிய விஷயத்தை ஒரு ஷாட்டில் காட்டி தான் இயக்குநர் என்பதை விஷால் வெங்கட் நிரூபித்திருக்கிறார். டிரெய்லர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறோம். படத்தில் மிகச் சிறந்த செய்தி இருக்கும். அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது… இந்தப்படம் பார்த்து மிகவும் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் சுகுமார் சார் செய்யாத தொழிலே இல்லை. எல்லாவற்றிலும் ஜெயித்துள்ளார். படத்திலும் ஜெயிக்கலாம் என வந்துள்ளார். அடுத்த மாதத்தில் பெண்களுக்கென ஒரு சாட்டிலைட் சேனல் ஆரம்பிக்கவுள்ளார். அவரிடம் நிறைய புது ஐடியாக்கள் உள்ளது. அவர் போல நிறையப் புதுமுகங்கள் திரைக்கு வரவேண்டும். இந்தப்படத்தில் காளி வெங்கட் அற்புதமாக நடித்துள்ளார். இப்படம் மண்டேலா, முண்டாசுபட்டி படங்கள் போல இனிமையான படமாக இருக்கும். அர்ஜூன் தாஸுக்கு ஒரு புதுமையான படமாக இருக்கும். அவர் இயக்குநர் கேட்டதை அப்படியே தந்துள்ளார். இமான் பாமர மக்களுக்கான எளிய இசையைத் தொடர்ந்து தந்து வரும் இசையமைப்பாளர். அவருடைய தேவை இங்கு நிறைய இருக்கிறது. எல்லோரும் இணைந்து அழகான படத்தைத் தந்துள்ளார்கள். இந்தப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவரும் முழு உழைப்பையும் தந்துள்ளார்கள். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.

இயக்குநர் ரா பார்த்திபன் பேசியதாவது… பாம் படத்தை பற்றி என்ன பேசுவது என நிறைய யோசித்தேன். முதலில் வாயு பகவானை வணங்கித் தொடங்குவோம். இந்த மாதிரி கதையை டைட்டிலை தேர்ந்தெடுக்கனும் என்றால் இயக்குநர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும், இதைத் தயாரிக்க வேண்டுமென்றால் தயாரிப்பாளர் அதைவிட எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும். ஆங்கில படங்களில் தான் இது மாதிரி பார்த்திருப்போம். ஆனால் அதைத் தமிழ் சினிமாவில் காட்டுவது சவாலான விஷயம், அதை இந்தப்படக்குழு சாதித்துள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் எப்போதும் கண்டென்ட் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். இந்த கண்டென்ட் அவருக்கு பிடித்திருக்கிறது. இமான் ஏ பி சி செண்டர் மட்டுமில்லை டி செண்டரையும் கவர்ந்து விடுவார், அதனால் தான் அவர் டி. இமான். தயாரிப்பாளர் சுகுமார் இல்லை சதா தான் – ஆம், சதா. சுதாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார். அதனால் சுதா இல்லை சதா தான் தயாரிப்பாளர். நான் எப்போதும் ஹீரோயின் பார்த்து தான் படம் செய்ய ஆசைப்படுவேன். ஆனால் அர்ஜூன் தாஸைப் பார்த்தால் ஹீரோவை மையமாக வைத்துப் படமெடுக்கத் தோன்றுகிறது. ஷிவாத்மிகாவை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறேன் – நல்ல நடிகை. தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகர் காளிவெங்கட் பேசியதாவது… இந்தப்படத்தில் இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு விஷால் வெங்கட்டுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது அவர் நடிப்பேனா என்ற சந்தேகத்திலேயே இருந்தார். அருமையான கேரக்டர் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. எத்தனை கோடி சம்பாதித்தாலும் தன் பிணக்கோலத்தைப் பார்க்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. அது மாதிரி நிறைய ஆச்சரியங்கள் இப்படத்தில் கிடைத்தது. அர்ஜூன் தாஸுடன் அநீதிக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறோம். படத்தில் என்னைத் தூக்கிச் சுமந்து நடித்துள்ளார், அவருக்கு என் நன்றி. சக்தி ஃபிலிம் ரிலீஸ் என்றார்கள் – படம் வெற்றி தான். தயாரிப்பாளர்கள் என்னை அமெரிக்கா கூட்டிப்போவதாகச் சொல்லியுள்ளார்கள். மறந்து விடாதீர்கள். இது மிக நல்ல படம். ஆதரவு தாருங்கள். எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் கார்த்திகேயன் மணி … இந்தப்படத்தின் கதைக்கரு சுவாரஸ்யமானதாக உள்ளது. காளிவெங்கட் சார் மெட்ராஸ் மேட்னி படத்தில் நடிக்கும் போது இந்தப்படம் பற்றிச் சொன்னார். அவர் சின்ன வயதிலேயே எத்தனை விதமான பாத்திரங்கள் செய்துவிட்டார். ஒரு முறை சேவலாக நடித்து காட்டி அசத்தினார். சயின்ஸ் ஃபிக்ஷன் படமெடுத்தால் அவரை ஏலியனாக நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் விஷால் வெங்கட் … GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் பெரிய நன்றி. ஒரு ஐடியா மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது மிகப்பெரிய விஷயம், என்னை நம்பி இன்று வரை ஆதரவாக இருக்கிறார்கள் நன்றி. அர்ஜூன் தாஸுக்கு இந்தக் கதை சொன்னேன், அவர் என்னை நம்பியதற்கு நன்றி. கதை எழுதியது முதல் ஷிவாத்மிகா தான் என் மைண்டில் இருந்தார், சிறப்பாக நடித்து தந்ததற்கு நன்றி. காளிவெங்கட் சாரிடம் கதை சொன்ன போது அவர் நடிப்பாரா எனச் சந்தேகம் இருந்தது. படம் முழுக்க பிணமாக நடிக்க வேண்டும், மூச்சு விடக்கூடாது – ஆனால் அசத்தியிருக்கிறார். சிங்கம்புலி சாரை நிறையக் கஷ்டப்படுத்தியுள்ளோம், சகித்துக்கொண்டதற்கு நன்றி. நாசர் சார் என் படத்தில் ஒரு ஃப்ரேமிலாவது இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன், அதே போல் தான் அபிராமி மேடமும். இருவருக்கும் நன்றி. ராஜ்குமார் – கேமரா பற்றி எதுவுமே தெரியாத ஆள்; நான் இயக்கம் என்றால் என்னவென்று தெரியாத ஆள். ஆனால் நாங்கள் படித்து இப்போது இந்த மேடையில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இருக்கிறோம் – மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்காக உழைத்துத் தந்த அனைவருக்கும் நன்றி. செப்டம்பர் 12 இந்தப்படம் திரைக்கு வருகிறது. உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்குமென நம்புகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் அர்ஜூன் தாஸ் … எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாப்பாத்திரம் தந்த விஷாலுக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் நன்றி. இருவரும் டீம்-ஓடு ஷூட்டில் கலந்துகொண்டு ஆதரவு தந்ததற்கு நன்றி. விஷால் – இமான் சார் தான் இசை என்றவுடன், அவர் படத்தைப் பார்த்துக்கொள்வார் என்று சொன்னேன். காளி வெங்கட் சார், அநீதி படத்தில் நடித்திருந்தாலும் அதில் ஒன்றாக நடிக்கவில்லை, ஆனால் இப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் நான் லீட் இல்லை, விஷால் அவர் டீம் தான் லீட். நான் ஒரு குட்டி பார்ட். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார், அவருடன் வேலை பார்த்தது சந்தோஷம். விஷால் கதை சொன்னவுடன் – “நான் தான் பண்ணனுமா?” எனக் கேட்டேன். எல்லோரும் சொல்லியும் என்னை நம்பி தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

இப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mgif
Madharaasi-thiraiosai.com