

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு துவங்கிவிட்டது. தற்போது இப்படத்தின் டீசர் சோஷியல் மீடியாவில் வைரலாக போய்க்கொண்டு இருக்கின்றது.
இதன் மூலமாக ஏ.ஆர். முருகதாஸ் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் பொருட் செலவில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார்.
அதன்படி பார்த்தால், மதராஸி காதல் கலந்த ஆக்ஷன் திரில்லர் படம் என சொல்லப்படுகின்றது. ஸ்பெஷல் டாஸ்க் அதிகாரிக்கும் வட இந்திய மாஃபியா கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் மதராஸி படமாம். இதற்கிடையில் காதல், தியாகம், மோதல், எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு கலவையான படம்.