நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்ருதிஹாசன் அவரது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இவர் கூலி திரைப்படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் அமீர் கானுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் பேசும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்து கூலி படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்களான ரஜினிகாந்த், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர் இடம் பெற்றுள்ளனர்.
கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

தலைவன் தலைவி படத்தின் “பொட்டல முட்டாயே” பாடல் வெளியானது
Spread the loveவிஜய் சேதுபதியின் 52-வது திரைப்படம் “தலைவன் தலைவி” திரைப்படத்தை, ‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய, இயக்குனர் பாண்டிராஜ்

KISS படத்தின் 2ஆவது சிங்கிள் நாளை வெளியாகிறது
Spread the loveதமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் கிஸ். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக

இன்று மாலை பறந்து போ படத்தின் டீசர் வெளியாகிறது
Spread the loveகற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம் தற்போது ‘பறந்து போ’ என்ற படத்தை இயக்கி உள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக

“தக் லைஃப்” பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியானது
Spread the loveஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ராஜேஷ் காலமானார்
Spread the loveதிரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம்,

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும்,‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
Spread the loveமெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்