Sun. Feb 2nd, 2025
RIPJayachandran/thiraiosai.comRIPJayachandran/thiraiosai.com
Spread the love

திருச்சூர்: பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் 80 உடல் நலக்குறைவால் காலமானார்.


தென்னிந்திய அளவில் பிரபல பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் (வயது 80) தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளி்ல 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.


கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக கேரளா மாநிலம் திருச்சூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயச்சந்திரன் காலமானாதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயச்சந்திரன் பாடிய மெல்லிசை பாடல்கள்;


  • வசந்தகால நதியினிலே, (மூன்று முடிச்சு)


  • கவிதை அரங்கேறும் நேரம், (அந்த 7 நாட்கள்)


  • காத்திருந்து காத்திருந்து, (வைதேகி காத்திருந்தாள்)

  • தாலாட்டுதே வானம் (கடல்மீன்கள்)

  • ஒரு வானவில் போலே (காற்றினிலே வரும் கீதம்)

  • சித்திர செவ்வானம் சிரிக்க (காற்றினிலே வரும் கீதம்)

  • அந்தி நேர தென்றல் காற்று (இணைந்த கைகள்)

  • ஒரு தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முத்தமிட்டாள் )

  • கொடியிலே மல்லிகைப்பூ… (கடலோர கவிதைகள் )

  • அம்மன்கோயில் கிழக்காலே (பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து )

  • புல்லை கூட பாட வைக்கும் புல்லாங்குழல் (என்புருசன் தான் எனக்கு மட்டும் தான்)

  • மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ( கரும்புவில்) உள்ளிட்ட பல போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

ஜெயச்சந்திரன் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *