ஷாம் நடித்திருக்கும் அஸ்திரம் படம் பிப்ரவரி 21-ல் வெளியாகிறது
ஷாம் நடித்திருக்கும் அஸ்திரம் படம் பிப்ரவரி 21-ல் வெளியாகிறது
ஷாம் நடித்திருக்கும் அஸ்திரம் படம் பிப்ரவரி 21-ல் வெளியாகிறது நடிகர் ஷாம் கடைசியாக 2019ம் ஆண்டு 'காவியன்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பிறகு குணசித்ரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்தார். தற்போது 'அஸ்திரம்' என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தை பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிக்கிறார். கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஷாம் நாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி நாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார்.
முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஐரா, எட்டு தோட்டாக்கள், பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். ரேஞ்சர், ஜாக்சன் துரை ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை பிப்ரவரி 21-ல் உலகமெங்கும் பைவ் ஸ்டார் நிறுவனம் வெளியிட உள்ளது.