Tourist-Family thiraiosai.com
Tourist-Family thiraiosai.com
Tourist-Family thiraiosai.com அபிஷான் ஜீவின்த் என்பவர் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ளபடம் டூரிஸ்ட் பேமிலி. குடும்ப பின்னணி கொண்ட காமெடி கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இலங்கை தமிழ் பேசி சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பும், டப்பிங் பணிகளும் ஒருபுறம் நடந்து வந்தன. இந்நிலையில் தற்போது இப்படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக அப்படத்தை தயாரித்துள்ள மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.