Mon. Feb 3rd, 2025
Spread the love

தனுஷ் இயக்குனராக ராயன் படத்திற்கு பிறகு மூன்றாவது படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். இவருடன் இணைந்து அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை தனுஷின் வுன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி அன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. மற்ற பணிகள் நடந்து வருகின்றன. தற்போது இட்லி கடை பட படப்பிடிப்பிற்கு இடைவெளிவிட்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் தனுஷ்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *