டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது 34வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இன்று(டிச., 14) பூஜை நிகழ்வுடன் தொடங்கியதாக அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஸ்ரீலீலா நாயகியாக தமிழில் அறிமுகமாக, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகளும் பூஜையுடன் இன்று(டிச., 14) துவங்கியது.
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் முதன்முறையாக இணைந்து 'டூரிஸ்ட் பேமிலி' எனும் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது இதன் டப்பிங் பணிகளை சசிகுமார் துவங்கியதாக அறிவித்துள்ளனர்.
மௌனம் பேசியதே, ஆறு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகிறார் த்ரிஷா. சூர்யா 45 வது படத்தில் நடிப்பதை அப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் நிறுவனம் ஒரு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அதோடு படப்பிடிப்பு தளத்தில் அவர் 22 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அதை கேக் வெட்டி கொண்டாடினர்.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் தற்போது நடித்துள்ள படம் படை தலைவன். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான பாச உணர்வுகளை வெளிக்காட்டும் வகையிலான காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது. அதோடு இந்த டிரைலரில் நடிகர் விஜயகாந்த் முகம் காட்டும் காட்சியும், அவரது சூப்பர் ஹிட் பாடலான பொட்டு வச்ச தங்க குடம் பாடலும் இடம் பெற்றுள்ளது.
ரோபோ சங்கர் தற்போது 'அம்பி' என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாகி உள்ளார். இந்த படத்தை டி2 மீடியா நிறுவனம் சார்பில் பிரசாந்தி பிரான்சிஸ் தயாரிக்கிறார். பாஸர் ஜே. எல்வின் இயக்குகிறார். ரோபோ சங்கருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடிக்க, காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி வருகிறது.