2024ம் ஆண்டு பொங்கல் தமிழ், தெலுங்கில் சில சர்ச்சைச்களை ஏற்படுத்திய பொங்கலாக அமைந்தது. தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆன படங்களை ஒரே சமயத்தில் வெளியிட தெலுங்குத் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், ‘அயலான், மற்றும் கேப்டன் மில்லர்’ படங்கள் அங்கு வெளியாகவில்லை. ஆனால் வரும் ஜனவரி 26இல், வெளியாவது உறுதியாகியுள்ளது. இதனிடையே, தெலுங்கில் பொங்கலுக்கு வெளியான படங்களில் மகேஷ் பாபு நடித்த ‘குண்டூர் காரம்’ படம் 230 கோடி வசூலையும், இளம் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்த ‘ஹனு மான்’ படம் 200 கோடி வசூலையும் கடந்துள்ளது. தெலுங்கில் வெளியான 4 படங்களில் 2 படங்கள் 200 கோடி வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், தமிழில் வெளியான 4 படங்களில் ‘அயலான், கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே 75 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் தெரிகிறது. ஆனாலும், அந்தப் படங்கள் 100 கோடி வசூலை எட்ட தடுமாறி வருகின்றன. 2024ம் ஆண்டின் ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார் கப்பட்ட இந்தப் படங்களின் வசூல் எதிர்பார்த அளவு இல்லை என்ற வருத்தத்தில் தியேட்டர்கார்கள் இருக்கிறார்கள். இனி வரும் சில பெரிய படங்களாவது எதிர்பார்ப்பை மீறி வசூலிக்குமா???