கடந்த 2022ஆம் ஆண்டில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “கட்டா குஸ்தி”. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்ககிய இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கட்டா குஸ்தியின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் செல்லா அய்யாவு உடன் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மிகப்பெரும் பொருள்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக உருவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள், தற்போது துவங்கி உள்ள நிலையில், படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.