Wed. Jun 4th, 2025 10:42:47 PM
Spread the love

‘திறந்திடு சீசே’ படத்தை தொடர்ந்து எம்.முத்து எழுதி இயக்கியுள்ள படம், ‘சிக்லெட்ஸ்’. எஸ்எஸ்பி பிலிம்ஸ் ஏ.சீனிவாசன் குரு தயாரித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் எம்.முத்து கூறியதாவது: ” எந்த ஒரு பெற்றோரும் தங்கள் வாரிசுகள் வாழ்க்கையில் தோற்கக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அதை வாரிசுகளிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். இதையே எப்படி வேண்டுமானாலும் வாழு. ஆனால், வாழ்க்கையில் நீ சிறந்தவனாக வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். பிள்ளைகளின் மனதிற்குள் மாற்றம் ஏற்படும். இக்கருத்தை வலியுறுத்தும் இந்தப் படத்துக்கு பிரபலமானவரின் பின்னணி குரல் அவசியம் என்பதை உணர்ந்து இயக்குநர் கே.பாக்யராஜை அணுகினோம். படத்தைப் பார்த்துவிட்டு அவர் சில நிறை, குறைகளை சுட்டிக் காட்டினார். இரண்டரை மணி நேரம் ஓடிய படம், அவர் சொன்ன குறைகளை நீக்கிய பிறகு 2 மணி நேரமாக மாறியது. இப்படத்தின் கிளைமாக்ஸ், 3 கேரக்டர்களுக்கும் நியாயப்படுத்தும் வகையில் இருக்கும். தயாரிப்பாளருக்கும், கே.பாக்யராஜுக்கும் கிளைமாக்ஸ் பிடித்திருந்தது. படம் வெளியான பிறகு இது மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்” என்றார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *