பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இப்படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இந்த படம் பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் முதல் பாடலான ‘ஆபராக்கோ டாபராக்கோ’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாக்கியம் சங்கர் எழுதியுள்ள இந்த பாடலை சந்தானம், ஷான் ரோல்டன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.