நடிகர் சங்கம் சார்பில் நடந்த, கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன், கேப்டன் பற்றி பேசுகையில் “பல அரசியல் தலைவர்களுக்கு வந்தது போன்ற கூட்டத்தை இவருக்கும் பார்த்தேன். பல அவமானங்களை தாண்டி, விமர்சனங்களை கடந்து மேலே வந்தவர் விஜயகாந்த். அதே போல் கடைநிலை நடிகர்களுக்கெல்லாம் விஜயகாந்த் ஒரு கடவுளாக இருந்துள்ளார். விஜயகாந்த்திடம் எனக்கு பிடித்தது அவரது நியாயமான கோபம்தான், அவர் கடந்த 26 வருடத்திற்கு முன்பு அதாவது 1998 ஆம் ஆண்டு, இன்ஜினியரிங் படிப்புக்கு பணம் இல்லாமல் இருந்த மூன்று மாணவர்களை பற்றிய செய்தி நாளிதழில் வெளியானது. உடனடியாக அந்த நாளிதழை தொடர்பு கொண்டு அந்த மூன்று மாணவர்களின் படிப்பு செலவை விஜயகாந்த் ஏற்று கொண்டார். அவர்கள் இப்போது மிகப்பெரிய இடத்தில் இருந்தாலும் இதை மறந்திருக்க மாட்டார்கள். இப்படி பலருக்கு உதவியுள்ளார் விஜயகாந்த்” என கமல் நெகிழ்ச்சியுடன் பேசினார்.