மலையாளத்தில் முன்னணி இயக்குனரான லிஜோ ஜோஸ், இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. இந்த படத்தில் சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, மனோஜ் மோசஸ், கதா நந்தி, டேனிஷ் சைட், மணிகண்டன் ஆச்சாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய ஆங்கிலேயர்கள் காலகட்டத்தில் நடப்பது போன்று படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..