இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் புதிதாக ‘நீளிரா’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தை பத்திரிகையாளர் சோமிதரன் இயக்கிவருகிறார், இதில் நவீன் சந்திரா, ரூபா கொடூவாயூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இலங்கைப் போரால் பாதிக்கப்பட்டவர்களின் கதையாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.