அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜோ’. இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சார்லி, அன்பு தாசன், ஏகன், கெவின் ஃபெல்சன், ப்ரவீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான ‘ஜோ’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் ரியோ ராஜ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் படம் சிறப்பாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தின் வெற்றியை படத்தின் தயாரிப்பாளர் படக்குழுவினருடன் இணைந்து சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்த நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 15-ம் தேதி பொங்கல் அன்று ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.