நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ (The Greatest Of All Time) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் ‘வாரிசு’ படப்பிடிப்பின் போது கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய நடிகர் விஜய், பாடலாசிரியர் விவேக் அடித்த சிக்சரை வெறும் பவுண்டரி என எதிர் அணியினர் சொன்னதுமே, நீயும் அதே இடத்துல தான் அடிச்சு சிக்சர்ன்னு சொன்ன, இதுவும் சிக்சர் தான் என செல்ல சண்டை போடுகிறார். இந்த வீடியோவை பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.