எஸ்.ஜே.சூர்யா கடந்த சில வருடங்களாக முன்னனி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் எஸ். ஜே. சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார். இது முழு நீள காமெடி படமாக உருவாகும் என கூறப்படுகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.