Sun. Jun 1st, 2025
Spread the love

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 68’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதிலேயே படத்தின் பெயர், “The Greatest Of All Time” என்றும் அறிவிக்கப்பட்டது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *