லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகைள் பிரியா பவானி சங்கர், பாவனா, மற்றும் நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அஜித் புகைப்படம் எடுத்திருந்தார். அவை இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன.இந்நிலையில், விடாமுயற்சியின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் சாட்லைட் மற்றும் இசை உரிமையை சன் டிவி, சோனி மியூசிக் ஆகியவை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.