Sat. Dec 21st, 2024
Spread the love

கடந்த 2015ம் ஆண்டு நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த அறம் என்ற படத்தை இயக்கியவர் கோபி நயினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் அகரம் காலனி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் நடைபெற்று வந்தது. அப்போது அகரம் காலனி படத்தின் லைட்மேன் சண்முகம் என்பவர் எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு தளத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். அதையடுத்து அவரை படக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். இந்த சம்பவத்தை அடுத்து சண்முகத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *