Mon. Jan 19th, 2026
Spread the love

இயக்குனர் பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாரசைட்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த படத்தில் லீ சுன் கியுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் லீ சுன் கியுன் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான ‘லவ்வர்ஸ்’ என்னும் சிட்காம் தொடரில் அறிமுகமானார். 2014-ஆம் ஆண்டு இவர் நடித்த ‘எ ஹார்ட் டே’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக இந்த ஆண்டு வெளியான ‘ஸ்லீப்’ என்ற படத்தில் லீ சுன் கியுன் நடித்திருந்தார். 48 வயதாகும் லீ சுன் கியுன் இன்று (டிசம்பர் 27) சியோல் நகரில் உள்ள ஒரு பார்க்கில் தனது காரின் உள்ளே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லீ சுன் கியுன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed