ஹர ஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், பொய்க்கால் குதிரை ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் தற்போது இயக்கி, நடித்து வரும் படம் ‘தி பாய்ஸ்’. ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த ஹர்ஷத், வினோத், ஷாரா, யுவராஜ் உள்பட பலர் இணைந்து நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அருண் மற்றும் கவுதம் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். நோவா பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் செந்தில்குமார் தயாரித்திருக்கிறார்.
படம் பற்றி சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறும் போது,சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை தொகுத்து திரைக்குத் தகுந்தாற்போல் கதையை உருவாக்கியுள்ளேன். 5 இளைஞர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
5 பேரும், அவர்களின் வாழ்க்கை இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால் அடுத்து என்ன ஆகும் என்பதை இதுவரை சொல்லப் படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த படம் உருவாக்கப்படுகிறது. கதையில் பெண்களுக்கென்று தனித்துவம் இல்லாததால் படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்துவரும் நட்சத்திரங்கள்தான், இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைத்த நிலையில் சில கிராஃபிக்ஸ் வேலைகள் மட்டுமே இருப்பதால், படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரையிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.