காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மணிகண்டன். இவர் குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது, மணிகண்டன் ‘லவ்வர்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்க படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க காமெடி, ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகிறது. படம் அடுத்தாண்டு காதலர் தினத்தன்று திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.