Sat. Dec 21st, 2024
Spread the love

சென்னை பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.  சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்ததாக சொல்லப்பட்டது. இதை தொடர்ந்து இவருக்கு திரை பிரபலங்கள் பலரும் உதவி செய்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின்பவுனு பவுனுதான்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் போண்டா மணி. வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உட்பட 250 மேற்ப்பட்ட திரைப்படங்களிலும், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் போண்டா மணி நடித்துள்ளார்.

நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *