ஜி, கிரிடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடித்துத் வருகிறார் திரிஷா. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லை என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் தற்போது விடாமுயற்சியில் நடித்துக் கொண்டே மலையாளத்தில் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்துத் வரும் ஐடெண்டிட்டி என்ற படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. அவர்கர்ளுடன் வினய்யும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த ஐடெண்டிட்டி படத்தில் தான் ஒரு கார் சேஸிங் காட்சிட்யில் நடித்த ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுட்ள்ளார் திரிஷா. அதில், அவர் கார் சேஸிங் காட்சியில் நடிப்பது போன்றும், அந்த காட்சிட்யை ட்ரோன் கேமரா மூலம் படமாக்குவதும் இடம்பெற்றிருக்கிறது.