
“யாரு போட்ட கோடு” திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா
டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீராம் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தீனா, ராதிகா, சிவாஜி ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.





